Friday, November 1, 2013

உல­கி­லேயே அதிக சுறு­சு­றுப்­பான மகப்­பேற்று மருத்­து­வ­மனை

 உல­கி­லேயே அதிக சுறு­சு­றுப்­பான மகப்­பேற்று மருத்­து­வ­மனை என்ற பெயரை பிலிப்­பைன்ஸின் மணிலா நக­ரி­லுள்ள டாக்டர் ஜோஸ் பபெலா (Jose Fabella) ஞாப­கார்த்த மருத்­து­வ­மனை பெறு­கி­றது.



இந்த மருத்­து­வ­ம­னைக்கு தின­சரி 300 கர்ப்­பிணித் தாய்­மார்கள் வரு­கின்­றனர்.



மகப்­பேற்றுமருத்­து­வ­ம­னை­யி­லுள்ள ஒவ்­வொரு கட்­டி­லிலும் 5 தாய்­மார்கள் வரை உறங்கி வரு­வ­துடன் அந்த மருத்­து­வ­ம­னையில் தின­சரி 100 குழந்­தைகள் வரை பிறக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

அத்­துடன் அங்கு பிர­சவ அறையில் ஒரே சம­யத்தில் 6 பெண்கள் வரை அனுமதிக்­கப்­ப­டு­கின்­றனர்.

குப்­பை­களைக் கொட்டும் பகு­தி­யொன்றின் மீது நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள இந்த மருத்­து­வ­மனை மணிலா நக­ரி­லுள்ள டொன்டோ (Tondo) சேரிப் பகு­தியைச் சேர்ந்தவர்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.




அந்த மருத்­து­வ­ம­னையின் தலைமை மருத்­து­விச்­சி­யான அன்னர் பிரேபஸ் (Anna Prebus) இதுவரை 200,000 குழந்தைகளின் பிரசவத்திற்கு உதவியுள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு இங்கே சென்று பார்வையிடுங்கள்....

நன்றி.

No comments:

Post a Comment

கருத்துக்கள்