Friday, November 1, 2013

இந்த ஆண்டின் உலகின் அதிசக்தி வாய்ந்த மனி­தர்கள்

 இந்த ஆண்டின் உலகின் அதிசக்தி வாய்ந்த மனி­த­ராக ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின் (Vladimir Putin) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அமெ­ரிக்க ‘போர்பஸ்’ (Forbes) சஞ்­சி­கையால் வெளி­யி­டப்­பட்ட மேற்­படி சக்திவாய்ந்த நபர்­க­ளுக்­கான வரு­டாந்தப் பட்டியலில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா இரண்டாம் இடத்­துக்குத் தள்­ளப்­ப­டு­வது கடந்த 3 வரு­டங்­களில் இதுவே முதல் தட­வை­யாகும்.




மேற்­படி பட்­டி­யலில் மூன்றாம் இடத்தை சீன ஜனா­தி­பதி ஸி ஜின்­பிங்கும், 4 ஆம் இடத்தை பாப்­ப­ரசர் பிரான்ஸிஸும் 5 ஆம் இடத்தை ஜேர்­ம­னிய அதிபர் அஞ்ஜெலா மெர்­கலும் 6 ஆம் இடத்தை மைக்ரோ சொப்ட்டின் தலைவர் பில் கேட்ஸும் பெற்­றுள்­ளனர்.




இந்தப் பட்­டி­ய­லி­லுள்ள முதல் 20 பேரில் இடம்பிடித்த இரு பெண்­களில் ஒரு­வ­ராக அஞ்ஜெலா மெர்­கல் விளங்கு­கிறார்.




மேலும், பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கமெரோன் இந்தப் பட்­டி­யலில் 11 ஆம் இடத்தில் உள்ளார்.

சிரி­யாவில் இடம்­பெற்று வரும் உள்­நாட்டு போர் தொடர்பில் அமெ­ரிக்­காவும் ரஷ்­யாவும் முரண்­பாட்டை எதிர்கொண்ட நிலையில் உலகின் அதி சக்தி வாய்ந்­த­வர்கள் பட்­டி­யலில் வெளி­யா­கி­யுள்­ளது.

கடந்த 12 வருட கால­மாக ரஷ்ய அர­சி­யலில் செல்­வாக்குச் செலுத்திவரும் புட்டின், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரஷ்­யாவின் ஜனா­தி­ப­தி­யாக மீளவும் தெரிவு செய்­யப்­பட்டார்.

வரவுசெல­வுத்­திட்ட மற்றும் கடன் பிரச்­சி­னையால் அமெ­ரிக்க அர­சாங்க நிறு­வ­னங்கள் 16 நாட்கள் மூடப்பட்டமை பராக் ஒபமாவின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்தமைக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.



Forbes' 2013 list of powerful people:
 

 

 
 
 

நன்றி.

No comments:

Post a Comment

கருத்துக்கள்