Friday, April 27, 2012

டைனோசர்கள் நீரில் வாழ்ந்த உயிரினம்

டைனோசர்கள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் விஞ்ஞானி பிரையன் ஜே போர்டு ஆவார். சிறந்த பேராசிரியராகவும் விளங்கி வரும் இவர் பி.பி.சி. ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது டைனசார்கள் குறித்து தனது கருத்தை குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், மிக பெரிய உருவம் கொண்ட, நீண்ட வாலை உடைய டைனசார்கள் பாலைவனங்களில் சுற்றி திரிந்து அதன் இரையை தேடுவது என்பது அதற்கு சிரமம் தருவதாகும். இது சாத்தியமற்றது. அதன் வால் நீரில் நீந்துவதற்கும், மிதந்தபடியே செல்வதற்கும் ஏற்ற வகையில் உள்ளது. மேலும் நீந்துவதற்கு அது உறுதுணை புரிகிறது என கூறினார்.
மேலும், நீரில் இருக்கும்பொழுது அதன் எடை முழுவதும் நீரால் தாங்கப்படுகிறது. இரையை பிடிப்பதற்கும் எளிதாகிறது. எனவே அது நீரில் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கூறினார். எனினும் அவரது இந்த கருத்து 100 வருடங்களுக்கு முன்பு அறிவியலாளர் ஒருவர் கூறிய கருத்தை ஒத்துள்ளதாக நிபுணர்களால் கூறப்படுகிறது.


நன்றி.

IPL 2012 அணிகளின் தரப்படுத்தல்

கையடக்கத் தொலைபேசியால் உடல் நலத்துக்கு தீங்கு இல்லை



கையடக்கத் தொலைபேசி பாவனையால் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுவதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு கவல் நிலையத்துக்கான பிந்திய பிரதான பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கை தெரிவிக்கின்றது.
கையடக்கத் தொலைபேசிகளின் கதிர்வீச்சு வெளிப்பாடுகள் குறித்து நூற்றுக்கணக்கான ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞானிகள், கையடக்கத் தொலைபேசிகளிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சிடையே தொடர்பு எதுவும் இருப்பதாக கண்டறியப்படவில்லை என தெரிவித்தனர்.
எனினும் மேற்படி கையடக்கத் தொலைபேசியால் ஏற்படக்கூடிய நீண்ட நாள் பாதிப்பு விளைவுகள் குறித்து அறியும் முகமாக தாம் தொடர்ந்து ஆய்வை மேற்கொண்டுள்ளதாக அந்த விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.


நன்றி.

Friday, April 13, 2012

சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

இப்படியான தினங்களிலாவது நாம் எல்லோரும் எமக்கென்று தனித்தனியான வீடுகளும் உறவு எல்லைகளும் உண்டு என்பதை மறந்து இந்த உலகே எமது வீடு எனவும் அனைவரும் எம் உறவுகள் எனவும் மனதில் கொள்வோம்.



நன்றி.

Sunday, April 1, 2012

பொழுதுபோக்கு


பொழுதுபோக்காக மிருகங்கள் மற்றும் பறவைகளிடையே சண்டையை ஏற்ற்படுத்தி வேடிக்கை பார்த்த மனிதன் தன் இனத்துள்ளேயும் சண்டையை ஏற்ற்படுத்தி அதனை கூட்டம் கூடி வேடிக்கையும் பார்க்கின்றான்.





நன்றி.