அறிமுகம்இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளும் தேசிய அடிப்படையில் இரு பிரதான மொழிகளாக உள்ளன. இலங்கை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் இவ் இரு மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விடயம் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும்.

தற்காலத்து நிலைமைகளைக் கொண்டு எதிர்காலத்தை நோக்கும்போது சிங்களவர் தமிழையும் தமிழர் சிங்களத்தையும் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்பது தெளிவாகின்றது.

இரு இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் தீர்க்கப்ப்ட வேண்டியது எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு அவ்வளவு இவ் இரு மொழிகளையும் இரு இன மக்களும் கற்றுக்கொள்வதும் இன்றியமையாததாகும்.

இத் தன்மையை கூற முற்பட்டால் "இரு மொழிகளும் இரு கண்கள்" என கூறிவிடலாம்.

எனது வலைப்பதிவில் என்ன எழுதுவது!!!, எப்படி இணையத்தளத்தில் உலாவருவோரை கவர்வது!!! என்ற நீண்ட நாள் குழப்பத்தின் பின் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்து என்னை ஊக்குவிய்யுங்கள்.
தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்.

எமக்கு அடுத்துவரும் சந்ததியினர் இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக உருவாகட்டும்.

No comments:

Post a Comment

கருத்துக்கள்