Sunday, December 18, 2011

வற்றுப்பெருக்குகள்

வற்றுப்பெருக்குகள்   Animation வடிவில்


நன்றி.

Wednesday, November 30, 2011

வளர்ந்து வரும் ஒரு தேடுபொறி

இந்த search engine இலும் தேடிப்பாருங்கள்

இத் தளத்திற்கு செல்ல இங்கே click செய்யுங்க...
http://www.cuil.pt/
   
நன்றி.

Sunday, November 20, 2011

வலுவூட்டும் பாடல் ஒன்று.


ன் மனதிற்கு வலுவூட்டும் இந்தப் பாடல் உங்களுக்கு கேற்கும் போது எப்படி உள்ளதென்று பாருங்கள்....


 ''சுற்றும் பூமி சுற்றும் வரை சூரிய நிலவு காயும் வரை நில்லாது அலைகள்,
வானம் பொடியாய் போனாலும் பூமி இரண்டாய் ஆனாலும் நில்லாது அலைகள்.

அலையை கிழிக்கும் படகை போல பாதை உண்டாக்க வா....
விதியை உடைக்கும் மதியை கொண்டு வெற்றி உண்டாக்க வா....

முதல் எதுவோ! முடிவு எதுவோ! விதி எழுதும் விடை எதுவோ!
  மதி எழுதும் வழி அதனில் சென்றுவிடு.

இடி  வரலாம், மழை வரலாம், படை  திரட்டும் புயல் வரலாம்
   பயணங்களில் இரண்டுமுண்டு வென்றுவிடு.

பாடலை கேற்க இங்கே click செய்யுங்கள்.....
 என்ன எங்கேயோ கேற்றது போல இருக்கா?....
நன்றி.

Sunday, October 30, 2011

''சிரிப்பு''


 மனிதனை தனித்துவப்படுத்திக் காட்டும் சிறப்புக் குணங்களில் இச் சிரிப்பும் முக்கியமானது, இருப்பினும் சிரிக்காமலிருக்கும் பலர் ஏதோ தம் stile என்று எண்ணிக்கொள்கிறார்களோ? அல்லது ??????, முக்கியமாக பொதுச்சேவை உத்தியோகத்தர்கள் பலர் பொதுமக்களிடம் எரிந்து விழுகிறார்கள். அரச ஊழியம் கிடைத்துவிடும் தானே என்ற திமிரோ? ஒரு பட்டிமன்றத்தில் சாலமன் பாப்பையா சொல்வார் ''தற்போது கற்பிக்கப்படும் கல்வி பணத்தினை சம்பாதிப்பதற்கு மட்டுமே, பண்பினை எடுத்துரைக்கத் தவறிவிடுகின்றன'' உண்மைதான்.

07 ஆம் அறிவு திரைப்படம்





வரலாற்றை மறக்கக் கூடாது என்பதையும் தமிழர் பாரம்பரியத்தியும் வீரத்தையும் ஆதாரப்படுத்தும் 07 ஆம் அறிவு திரைப்படம், யாழ் நூலகம் எரிக்கப்பட்டமையும் நினைவுகூறப்படுகிறது. மிக அற்புதமான படைப்பு....

Saturday, October 29, 2011

சின்னத்திரைகளின் title பாடல்கள்


பொதுவாக சின்னத்திரைகளின் title பாடல்கள் நம் மனதில் இலகுவாகப் பதிந்துவிடும், எனக்கு சின்னத்திரைகள் பார்க்கப் பிடிக்காது, ஆனால் அவற்றின் title பாடல்கள் கேற்கப் பிடிக்கும். ‘’Isaitamil.in’’ இத் தளத்தின் home page இல் Serial Songs இனை click செய்யுங்கள். or , You tube இல் video ஆக search செய்தும் பார்க்கலாம்.

''ஆசிரியர் தினம்''


சில ஆசிரியர்களைப் பார்த்தால் இவர்களின் மூளை எமக்கு வந்திருக்கக் கூடாதா! என தோன்றும், சில ஆசிரியர்களைப் பார்த்தால் இவர்கள் எப்படித்தான் ஆசிரியர்களாக வந்தார்களோ? எனத் தோன்றும், முதல்வகை ஆசிரியர்கள் மட்டுமே இருந்தால் போதும். நீங்க என்ன சொல்ரீங்க?

திரைப்படங்களில் சில வரிகள்



திரைப்படங்களில் சில வரிகள் எம் உயிரைத் தொடுவதுண்டு, அதற்கு பின்னணி இசையும் காட்சியும் அழகாக வடிவமைக்கப்படுவது எம் மனதில் பதிய ஏதுவாகின்றது, ''டிஸ்யூம்'' என்ற திரைப்படத்தில் இந்த நண்பர் கூறும் வரிகள். ''கடவுள் கூட தவறு செய்பவன் தானே! இல்லையென்றால் என்னை இப்படிப் படைத்திருப்பானா?''

"விசேட தேவையுடையோர்"




இவர் போன்ற நண்பர்களை ஊணமுற்றோர் என்று அழைப்பதனை விட "விசேட தேவையுடையோர்" என்று அழைப்பது அழகல்லவா?.... சில ஊடகங்கள் அழகாக இருந்தாலும் சில ஊடகங்கள் அதனை மாற்றாமல் இருப்பது கவலைக்குரியதே, "விசேட தேவையுடையோர்" என்று அழைக்கும் ஊடகங்களுக்கும் ஏனையோர்க்கும் எனது வாழ்த்துக்கள்.

Wednesday, October 5, 2011

சமுத்திரங்களின் தோற்றம்.


புவி வரலாற்று காலங்களினூடாக எப்படி சமுத்திரங்கள் தோன்றின?



04 படிநிலைகளூடாக சமுத்திரங்களின் தோற்றம்.



Source - Daniel L. Pinti, (2005), The Origin and Evolution of the Oceans, Berlin.


Thursday, September 15, 2011

சிங்களம் கற்போம்.

ආයුපොවන් - வணக்கம்.

Friday, September 2, 2011

இலங்கையின் கேந்திர முக்கியத்துவம்.


வ்வொரு நாட்டினதும் வரலாறில் அந்த நாட்டின் அமைவிடம் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. மக்களின் வாழ்க்கை, அரசாட்சி என்பன நிர்ணயிக்கப்பட்டிருப்பது இந்த அமைவின் அடிப்படையிலாகும், மேலும் விவசாயம், மொழி, கைத்தொழில், அன்றாட வாழ்க்கையிலும் கூட இக் கேந்திர முக்கியதுவம் செல்வாக்குச் செலுத்தியுள்ளது.

   இலங்கை இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக அமைந்திருக்கின்றது. இதன் மூலமாக இந் நாட்டவர்கள் கடல் மார்க்கமாக தூர தேசங்களுக்கும் தொழில் வாய்ப்புக்களுக்காகச் சென்று வந்தனர்.

   இந்தியா, பர்மா, சீனா, சுமத்திரா போன்ற நாடுகளுக்கும் வர்த்தகர்காளாகச் சென்று வந்துள்ளனர். இதனால் கடல்வழி வாணிபம் அக்காலங்களில் பிரசித்தி பெற்றிருந்தது என்பதனை அறிய முடிகின்றது. 1 ஆம் விஜயபாகு, 1 ஆம் பராக்கிரமபாகு மன்னர்களின் காலத்தில் இலங்கையிலிருந்து கப்பல்கள் சரக்குகளுடனும் பிரயாணிகளுடனும் பர்மாவுக்கும் இந்தியாவுக்கும் அனுப்பப்பட்டதாக கிறிப்புக்கள் உள்ளன.

   இலங்கை பழமை வாய்ந்த கடலாதிக்கம் கொண்ட வியாபாரப் பாதைகளின் மத்தியில் அமைந்துள்ளது. இது கி.மு.250 இலிருந்து அருகிலுள்ள அலெக்சாந்திரியா மற்றும் சீனா போன்ற பிரதேசங்களுடன் வியாபாரச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்த புவியியல் சார் அமைவிடமானது கிழக்கு மற்றும் மேற்கிற்கு இடையில் வியாபார மற்றும்  கலாச்சாரத் தொடர்புகளைக் கட்டியெழுப்புவதற்கான பிரதான இணைப்பாகக் காணப்படுகின்றது. இதனை கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் இருந்து கிடைக்கின்ற புராதன கல்வெட்டுக்கள் மற்றும் ஏனைய மூலங்களிலிருந்து கண்டுகொள்ள முடியும்.

   இப்பொழுது கூட அதே கடலாதிக்கப் பாதையினை பொருளாதார அபிவிருத்திக்கான மாபெரும் சக்தியாக இலங்கை பயன்படுத்துகின்றது. இன்று கூட ஐரோப்பாவிலிருந்து மத்திய கிழக்கு ஊடாக சீனா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடன் வியாபாரத் தொடர்புகள் ஏற்படுத்தப்படுகின்றது.

   இலங்கை தெற்காசியாவில் உள்ள ஒரு தீவாகும். இது பண்டைய காலம் தொடக்கம் முக்கிய வர்த்தக நிலையமாகவும் திகழ்கின்றது. இயற்கை வளங்களான மண், முத்து மாணிக்கங்கள், காரீயம் ஆகிய கனிய வளங்களுடன் விசேட விலங்குகளும் தாவரங்களும் இலங்கைக்கு உரியதாக உள்ளன. நாட்டின் அமைப்பும் இயற்கை வளங்களும் உள்ளக நில அமைப்பும் எமது நாட்டின் வரலாற்றில் பலவித அழுத்தங்களுக்குக் காரணமாக அமைந்தன.

Sunday, August 7, 2011

கைத்தொலைபேசி இணையத்தில் தமிழ் மொழி.

பொதுவாக கைத்தொலைபேசி இணையத்தில் தமிழ் மொழியை பார்க்க முடிவதில்லை, இதற்குக் காரணம் அதற்கு உறிய முறையில் அது Setting செய்யப்பட்டே விற்பனைக்கு வருவதில்லை, நாம் செய்துகொள்ளக்கூடிய இலகுவான Setting ஒன்று உள்ளது.

1. உங்கள் மொபைலில் GPRS வசதியை உயிர்ப்பித்து கொண்டு, மொபைல் மூலம் http://www.opera.com/mini/
இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினி தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.
2. மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.
3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
4. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.
இனி உங்கள் மொபைலில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றியும் பார்க்கலாம்