Saturday, November 2, 2013

உலகின் வளமிக்க நாடுகளின் வரிசை - 2013

 உலகின் வளமிக்க நாடுகளில் நோர்வே முதலிடத்தை பிடித்துள்ளது.



உலக நாடுகளில் வளமிக்க நாடுகள் பட்டியலை பிரித்தானியாவை தளமாகக் கொண்ட லெகாடம் (Legatum) ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் இரண்டாமிடத்தில் சுவிட்சர்லாந்தும் 3ம் இடத்தில் கனடாவும் உள்ளன.

அத்துடன் பொருளாதார சரிவு காரணமாக அமெரிக்கா 11 ஆவது இடத்திலும் , பிரித்தானியா 16 ஆவது இடத்திலுள்ளமுள்ளன.

மேலும் 4-ம் இடத்தில் சுவீடன், 5ம் இடத்தில் நியூசிலாந்து, 6ம் இடத்தில் டென்மார்க் இடம்பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் இந்தியா 106 ஆவது இடத்திலுள்ளதுடன் சீனா 51 ஆவது இடத்திலுமுள்ளன.






நன்றி.

Friday, November 1, 2013

Kepler-78b : பூமியை போன்ற கோள்

 பூமி­யி­லி­ருந்து 400 ஒளி­யாண்­டுகள் தொலை­வி­லுள்ள நட்­சத்­தி­ர­மொன்றை வலம் வரும் பூமி­யை­யொத்த திணி­வையும் அடர்த்­தி­யையும் கொண்ட கோளொன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.




கெப்லர் 78பி (Kepler-78b) என அழைக்­கப்­படும் இந்தக் கோள் எமது பூமியைப் போன்று பாறை­க­ளையும் இரும்­பையும் கொண்­டுள்­ளது.



ஆனால், இந்தக் கோளுக்கும் அத­னது தாய் நட்­சத்­தி­ரத்­துக்­கு­மி­டை­யி­லான தூரம் பூமிக்கும் சூரி­ய­னுக்கும் இடை­யி­லான தூரத்­துடன் ஒப்­பி­டு­கையில் நூறில் ஒரு பங்­கா­கும்.




இதன் கார­ண­மாக உயிர்வாழ்க்­கைக்கு சிறிதும் சாத்­தி­ய­மற்ற வகையில் 2000 பாகை செல்­சி­ய­ஸுக்கும் 2800 பாகை செல்­சி­ய­ஸுக்கும் இடைப்­பட்ட அதி­கூ­டிய வெப்­ப­நிலை நில­வு­கி­றது.

‘கெப்லர்’ - 78பி தனது தாய் நட்சத்திரத்தை 12 மணித்தியாலத்திலும் குறைந்த நேர த்தில் சுற்றி வருகிறது.


நன்றி.

இந்த ஆண்டின் உலகின் அதிசக்தி வாய்ந்த மனி­தர்கள்

 இந்த ஆண்டின் உலகின் அதிசக்தி வாய்ந்த மனி­த­ராக ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின் (Vladimir Putin) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அமெ­ரிக்க ‘போர்பஸ்’ (Forbes) சஞ்­சி­கையால் வெளி­யி­டப்­பட்ட மேற்­படி சக்திவாய்ந்த நபர்­க­ளுக்­கான வரு­டாந்தப் பட்டியலில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா இரண்டாம் இடத்­துக்குத் தள்­ளப்­ப­டு­வது கடந்த 3 வரு­டங்­களில் இதுவே முதல் தட­வை­யாகும்.




மேற்­படி பட்­டி­யலில் மூன்றாம் இடத்தை சீன ஜனா­தி­பதி ஸி ஜின்­பிங்கும், 4 ஆம் இடத்தை பாப்­ப­ரசர் பிரான்ஸிஸும் 5 ஆம் இடத்தை ஜேர்­ம­னிய அதிபர் அஞ்ஜெலா மெர்­கலும் 6 ஆம் இடத்தை மைக்ரோ சொப்ட்டின் தலைவர் பில் கேட்ஸும் பெற்­றுள்­ளனர்.




இந்தப் பட்­டி­ய­லி­லுள்ள முதல் 20 பேரில் இடம்பிடித்த இரு பெண்­களில் ஒரு­வ­ராக அஞ்ஜெலா மெர்­கல் விளங்கு­கிறார்.




மேலும், பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கமெரோன் இந்தப் பட்­டி­யலில் 11 ஆம் இடத்தில் உள்ளார்.

சிரி­யாவில் இடம்­பெற்று வரும் உள்­நாட்டு போர் தொடர்பில் அமெ­ரிக்­காவும் ரஷ்­யாவும் முரண்­பாட்டை எதிர்கொண்ட நிலையில் உலகின் அதி சக்தி வாய்ந்­த­வர்கள் பட்­டி­யலில் வெளி­யா­கி­யுள்­ளது.

கடந்த 12 வருட கால­மாக ரஷ்ய அர­சி­யலில் செல்­வாக்குச் செலுத்திவரும் புட்டின், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரஷ்­யாவின் ஜனா­தி­ப­தி­யாக மீளவும் தெரிவு செய்­யப்­பட்டார்.

வரவுசெல­வுத்­திட்ட மற்றும் கடன் பிரச்­சி­னையால் அமெ­ரிக்க அர­சாங்க நிறு­வ­னங்கள் 16 நாட்கள் மூடப்பட்டமை பராக் ஒபமாவின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்தமைக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.



Forbes' 2013 list of powerful people:
 

 

 
 
 

நன்றி.

உல­கி­லேயே அதிக சுறு­சு­றுப்­பான மகப்­பேற்று மருத்­து­வ­மனை

 உல­கி­லேயே அதிக சுறு­சு­றுப்­பான மகப்­பேற்று மருத்­து­வ­மனை என்ற பெயரை பிலிப்­பைன்ஸின் மணிலா நக­ரி­லுள்ள டாக்டர் ஜோஸ் பபெலா (Jose Fabella) ஞாப­கார்த்த மருத்­து­வ­மனை பெறு­கி­றது.



இந்த மருத்­து­வ­ம­னைக்கு தின­சரி 300 கர்ப்­பிணித் தாய்­மார்கள் வரு­கின்­றனர்.



மகப்­பேற்றுமருத்­து­வ­ம­னை­யி­லுள்ள ஒவ்­வொரு கட்­டி­லிலும் 5 தாய்­மார்கள் வரை உறங்கி வரு­வ­துடன் அந்த மருத்­து­வ­ம­னையில் தின­சரி 100 குழந்­தைகள் வரை பிறக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

அத்­துடன் அங்கு பிர­சவ அறையில் ஒரே சம­யத்தில் 6 பெண்கள் வரை அனுமதிக்­கப்­ப­டு­கின்­றனர்.

குப்­பை­களைக் கொட்டும் பகு­தி­யொன்றின் மீது நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள இந்த மருத்­து­வ­மனை மணிலா நக­ரி­லுள்ள டொன்டோ (Tondo) சேரிப் பகு­தியைச் சேர்ந்தவர்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.




அந்த மருத்­து­வ­ம­னையின் தலைமை மருத்­து­விச்­சி­யான அன்னர் பிரேபஸ் (Anna Prebus) இதுவரை 200,000 குழந்தைகளின் பிரசவத்திற்கு உதவியுள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு இங்கே சென்று பார்வையிடுங்கள்....

நன்றி.