Thursday, September 15, 2011

சிங்களம் கற்போம்.

ආයුපොවන් - வணக்கம்.

Friday, September 2, 2011

இலங்கையின் கேந்திர முக்கியத்துவம்.


வ்வொரு நாட்டினதும் வரலாறில் அந்த நாட்டின் அமைவிடம் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. மக்களின் வாழ்க்கை, அரசாட்சி என்பன நிர்ணயிக்கப்பட்டிருப்பது இந்த அமைவின் அடிப்படையிலாகும், மேலும் விவசாயம், மொழி, கைத்தொழில், அன்றாட வாழ்க்கையிலும் கூட இக் கேந்திர முக்கியதுவம் செல்வாக்குச் செலுத்தியுள்ளது.

   இலங்கை இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக அமைந்திருக்கின்றது. இதன் மூலமாக இந் நாட்டவர்கள் கடல் மார்க்கமாக தூர தேசங்களுக்கும் தொழில் வாய்ப்புக்களுக்காகச் சென்று வந்தனர்.

   இந்தியா, பர்மா, சீனா, சுமத்திரா போன்ற நாடுகளுக்கும் வர்த்தகர்காளாகச் சென்று வந்துள்ளனர். இதனால் கடல்வழி வாணிபம் அக்காலங்களில் பிரசித்தி பெற்றிருந்தது என்பதனை அறிய முடிகின்றது. 1 ஆம் விஜயபாகு, 1 ஆம் பராக்கிரமபாகு மன்னர்களின் காலத்தில் இலங்கையிலிருந்து கப்பல்கள் சரக்குகளுடனும் பிரயாணிகளுடனும் பர்மாவுக்கும் இந்தியாவுக்கும் அனுப்பப்பட்டதாக கிறிப்புக்கள் உள்ளன.

   இலங்கை பழமை வாய்ந்த கடலாதிக்கம் கொண்ட வியாபாரப் பாதைகளின் மத்தியில் அமைந்துள்ளது. இது கி.மு.250 இலிருந்து அருகிலுள்ள அலெக்சாந்திரியா மற்றும் சீனா போன்ற பிரதேசங்களுடன் வியாபாரச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்த புவியியல் சார் அமைவிடமானது கிழக்கு மற்றும் மேற்கிற்கு இடையில் வியாபார மற்றும்  கலாச்சாரத் தொடர்புகளைக் கட்டியெழுப்புவதற்கான பிரதான இணைப்பாகக் காணப்படுகின்றது. இதனை கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் இருந்து கிடைக்கின்ற புராதன கல்வெட்டுக்கள் மற்றும் ஏனைய மூலங்களிலிருந்து கண்டுகொள்ள முடியும்.

   இப்பொழுது கூட அதே கடலாதிக்கப் பாதையினை பொருளாதார அபிவிருத்திக்கான மாபெரும் சக்தியாக இலங்கை பயன்படுத்துகின்றது. இன்று கூட ஐரோப்பாவிலிருந்து மத்திய கிழக்கு ஊடாக சீனா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடன் வியாபாரத் தொடர்புகள் ஏற்படுத்தப்படுகின்றது.

   இலங்கை தெற்காசியாவில் உள்ள ஒரு தீவாகும். இது பண்டைய காலம் தொடக்கம் முக்கிய வர்த்தக நிலையமாகவும் திகழ்கின்றது. இயற்கை வளங்களான மண், முத்து மாணிக்கங்கள், காரீயம் ஆகிய கனிய வளங்களுடன் விசேட விலங்குகளும் தாவரங்களும் இலங்கைக்கு உரியதாக உள்ளன. நாட்டின் அமைப்பும் இயற்கை வளங்களும் உள்ளக நில அமைப்பும் எமது நாட்டின் வரலாற்றில் பலவித அழுத்தங்களுக்குக் காரணமாக அமைந்தன.