Thursday, May 31, 2012

சிங்கள எழுத்துக்களின் உச்சரிப்புக்கள்


இவற்றில் பல எழுத்துக்களை நாம் முன்னைய பதிவுகளிலும் ஏற்கனவே பார்த்துள்ளோம்.அந்த பதிவுகளை பார்க்க
இங்கே சொடுக்குங்கள்.

இந்த பதிவும் மேலதிக விளக்கத்திற்காக பதிவிடப்படுகின்றது.

எந்த மொழியானாலும் அதன் எழுத்துக்களில் தெளிவு இருந்தால் மட்டுமே பூரணமாக அம்மொழியை கற்க முடியும்.

Vowels    

உச்சரிப்பு
எழுத்துக்கள்
AYANNA
AAYANNA
AEYANNA
AEEYANNA
IYANNA
IIYANNA
UYANNA
UUYANNA
IRUYANNA
IRUUYANNA
ILUYANNA
ILUUYANNA
EYANNA
EEYANNA
AIYANNA
OYANNA
OOYANNA
AUYANNA








Consonants


உச்சரிப்பு
எழுத்துக்கள்
KAYANNA
KAYANNA
GAYANNA
GAYANNA
(NAA)
GAYANNA
CAYANNA
CAYANNA
JAYANNA
JAYANNA
(NAA)
(NAA)
JAYANNA
TTAYANNA
TTAYANNA
DDAYANNA
DDAYANNA
NAYANNA
DDAYANNA
TAYANNA
TAYANNA
DAYANNA
DAYANNA
NAYANNA
DAYANNA
PAYANNA
PAYANNA
BAYANNA
BAYANNA
MAYANNA
BAYANNA
YAYANNA
RAYANNA
LAYANNA
VAYANNA
SAYANNA
SAYANNA
SAYANNA
HAYANNA
LAYANNA
FAYANNA
































நன்றி.

Tuesday, May 29, 2012

பேஸ்புக் எப்படி பணம் சம்பாதிக்கின்றது?



அண்மையில் பேஸ்புக் 66 பில்லியன் பௌண்ட்ஸ் மதிப்பினை பெற்றவுடன் பலர் திகைப்படைந்தனர். இது எப்படி என்ற ஆராச்சியில் ஈடுபடவும் ஆரம்பித்தனர். இந்த பேஸ்புக் தளமானது மக்கள் இணைந்துகொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் இலவசமாக இருக்கின்ற நிலையில், எப்படி பணம் சம்பாதிக்க இயலும் என்ற கேள்வி எழுவது இயல்பானதே.





பேஸ்புக்கின் புள்ளிவிபரங்கள் பெரும் ஆச்சரியத்திற்குரியனவாக அமைந்துள்ளன. இத்தளம் தனது ஆரம்ப பொது வழங்களில் (IPO), ஒரு பங்கானது 38 பில்லியன் டொலர்களாகவும் அதன் மதிப்பானது 104 பில்லியன் டொலர்களாகவும் (£ 66 பில்லியன்) மைந்துள்ளது. இது அமெரிக்காவின் வரலாற்றில் 3வது பெரிய வழங்களாக உள்ளது. அதாவது ஆப்பிள் (£ 315 பில்லியன்), கூகிள் (£129பில்லியன்) இரண்டிற்கும் அடுத்தபடியாக பேஸ்புக் உள்ளது. அதற்கடுத்ததாக முறையே Amazon (£ 62 பில்லியன்), Cisco (£ 57 பில்லியன்) என்பன காணப்படுகின்றன.

Harvard ல் சில மாணவர்களால் பயன்படுத்தப்பட்ட இத்தளம் இன்று 900 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது. 2012, மார்ச்சில் ஒவ்வொருநாளும் பேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சராசரியாக 526 ஆகக் காணப்பட்டதாகவும் இது சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது 41% அதிகம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக மார்ச் 31 இல் 125 பில்லியன் நண்பர் இணைப்புக்களையும் 3.2 பில்லியன் Likes, Comments என்பவற்றையும் பதிவுசெய்துள்ளது.

அத்துடன் இந்த மார்ச் மாதத்தல், கூகிள் உட்பட உலகிலுள்ள ஏனைய பிரபல்யமான தளங்களை விட, பேஸ்புக்கிலேயே மக்கள் அதிக பக்கங்களை பார்வையிட்டதுடன் அதிக நேரத்தையும் செலவிட்டுள்ளனர் என புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

இவையெல்லாம் ஒருபுறமிருக்கட்டும். இப்போது விடயத்திற்கு வருவோம். பேஸ்புக் எப்படி பணம் ஈட்டுகின்றது?, ஏன் முதலீட்டாளர்கள் இத்தளத்துடன் இணைகின்றார்கள்?, இந்த நிலை தொடர்ந்து சாத்தியமாகுமா? என்பவற்றை சற்று நோக்குவோம்.

விளம்பரங்கள்

கடந்த ஆண்டில் பேஸ்புக் 3.7 பில்லியன் டொலர்களை (£ 2.4 பில்லியன்) வருமானமாக பெற்றது. இது 2010 இனை விட 88% அதிகமாகும். இந்த வருவாயில் 3.1 பில்லியன் டொலர்கள் (£ 2 பில்லியன்), விளம்பரங்கள் மூலமே பெறப்பட்டதாகும். எனவே ஏனைய வழிகளில் இருந்து கிடைக்கும் வருமானங்களை விட இது அதிக விகிதத்தினை காட்டிநிற்கின்றது.

பேஸ்புக்கில் உள்ள உள்ள இரண்டு முக்கியமான விடயங்கள் விளம்பரதாரர்களை கவர்கின்றன. ஒன்று, சுமார் 500 மில்லியன் பேர் தினமும் பயன்படுத்துவதனால் இலகுவாக அதிகமானோரை சென்றடைகின்றது. இரண்டாவது, தனிநபர்கள் இணையத்தளங்களுடன் தகவல்களை பகிர்வதனால் பொருத்தமான விளம்பரங்களை தேர்ந்தெடுக்க இலகுவாகின்றது.

மேலும், பேஸ்புக்கில் பயனர்கள் தமது விபரங்களை (Interests, Status) பதிய முற்படுகின்றபோது பெருமளவிலான விளம்பரங்கள் அப்பக்கத்தில் தோன்றுவதை காணலாம். அத்துடன் நண்பர்களின் விபரங்களோடு அவர்களது வர்த்தகம் சார்ந்த விடயங்களும் முதன்மைப்படுத்திக் காட்டப்படுவதனாலும் விளம்பரங்கள் எளிதில் பிரபல்யம் அடைகின்றன.

பேஸ்புக் பயனர்களில் பாதிப்பேரிற்கு மேற்பட்டோர் மொபைல் மூலமே பயன்படுத்துகின்றனர். இருப்பினும் மொபைல் பேஸ்புக்கில் விளம்பரங்கள் உள்வாங்கப்படவில்லை. இதற்கான காரணத்தை பேஸ்புக் உரிமையாளர் Zuckerberg குறிப்பிடுகையில், மொபைல் பயனர்களுக்கான பணம்சார் கொடுக்கல் வாங்கல்களை வெற்றிகரமாக மேற்கொள்வதற்குரிய வசதிகள் இதுவரை தமது நிறுவனம் மேம்படுத்தவில்லை என்றார்.

எனினும் Photo - Sharing App என்ற தொழில்நுட்பமானது இந்த பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் வகையில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


விளம்பரங்கள் தவிர்ந்த வருமானம்

Zynga, CityVille, FarmVille, Empires & Allies,  ZyngaPoker போன்ற Online விளையாட்டுக்கள் (Games) பேஸ்புக் தளத்தில் பெற்றுக்கொள்ளும் வசதி இருப்பதனால் அதற்குரிய வருமானமும் பெறப்படுகின்றது. Farm Ville என்ற விளையாட்டை விளையாடுவதன் மூலம் பயனர்கள் கூட பணம் சம்பாதிக்கும் வசதி காணப்படுகின்றது.

இலக்கை அடையாத விளம்பரங்கள்

எல்லா விளம்பரங்கள் மூலமும் தொடர்ந்து வருமானம் ஈட்ட முடியும் என்பது சந்தேகமே. ஏனெனில் General Motors நிறுவனம், போதிய விற்பனை இடம்பெறாததனால் பேஸ்புக்கில் உள்ள தனது விளம்பரங்களை மீளப்பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

தேடுபொறி சேவைகளின் விளம்பரங்களை பார்வையிடும் விகிதத்தினை பொறுத்தவரையில் கூகிள் 0.4% மாகவுள்ள அதே நேரம் பேஸ்புக் 0.05% மாகவே உள்ளது. இதற்கு காரணம் என்னவெனில், மக்கள் பேஸ்புக்கை விட கூகிளை நடவேடிய தேவைகளே அதிகமாக உள்ளது. உதாரணமாக My Space போன்ற சேவைகள் முக்கியத்துவமுடையதாக இருந்துவருகின்றன.



நன்றி.