Friday, April 27, 2012

டைனோசர்கள் நீரில் வாழ்ந்த உயிரினம்

டைனோசர்கள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் விஞ்ஞானி பிரையன் ஜே போர்டு ஆவார். சிறந்த பேராசிரியராகவும் விளங்கி வரும் இவர் பி.பி.சி. ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது டைனசார்கள் குறித்து தனது கருத்தை குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், மிக பெரிய உருவம் கொண்ட, நீண்ட வாலை உடைய டைனசார்கள் பாலைவனங்களில் சுற்றி திரிந்து அதன் இரையை தேடுவது என்பது அதற்கு சிரமம் தருவதாகும். இது சாத்தியமற்றது. அதன் வால் நீரில் நீந்துவதற்கும், மிதந்தபடியே செல்வதற்கும் ஏற்ற வகையில் உள்ளது. மேலும் நீந்துவதற்கு அது உறுதுணை புரிகிறது என கூறினார்.
மேலும், நீரில் இருக்கும்பொழுது அதன் எடை முழுவதும் நீரால் தாங்கப்படுகிறது. இரையை பிடிப்பதற்கும் எளிதாகிறது. எனவே அது நீரில் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கூறினார். எனினும் அவரது இந்த கருத்து 100 வருடங்களுக்கு முன்பு அறிவியலாளர் ஒருவர் கூறிய கருத்தை ஒத்துள்ளதாக நிபுணர்களால் கூறப்படுகிறது.


நன்றி.

No comments:

Post a Comment

கருத்துக்கள்