இந்த ஆண்டின் உலகின் அதிசக்தி வாய்ந்த மனிதராக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க ‘போர்பஸ்’ (Forbes) சஞ்சிகையால் வெளியிடப்பட்ட மேற்படி சக்திவாய்ந்த நபர்களுக்கான வருடாந்தப் பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்படுவது கடந்த 3 வருடங்களில் இதுவே முதல் தடவையாகும்.
மேற்படி பட்டியலில் மூன்றாம் இடத்தை சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கும், 4 ஆம் இடத்தை பாப்பரசர் பிரான்ஸிஸும் 5 ஆம் இடத்தை ஜேர்மனிய அதிபர் அஞ்ஜெலா மெர்கலும் 6 ஆம் இடத்தை மைக்ரோ சொப்ட்டின் தலைவர் பில் கேட்ஸும் பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலிலுள்ள முதல் 20 பேரில் இடம்பிடித்த இரு பெண்களில் ஒருவராக அஞ்ஜெலா மெர்கல் விளங்குகிறார்.
மேலும், பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் இந்தப் பட்டியலில் 11 ஆம் இடத்தில் உள்ளார்.
சிரியாவில் இடம்பெற்று வரும் உள்நாட்டு போர் தொடர்பில் அமெரிக்காவும் ரஷ்யாவும் முரண்பாட்டை எதிர்கொண்ட நிலையில் உலகின் அதி சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் வெளியாகியுள்ளது.
கடந்த 12 வருட காலமாக ரஷ்ய அரசியலில் செல்வாக்குச் செலுத்திவரும் புட்டின், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யாவின் ஜனாதிபதியாக மீளவும் தெரிவு செய்யப்பட்டார்.
வரவுசெலவுத்திட்ட மற்றும் கடன் பிரச்சினையால் அமெரிக்க அரசாங்க நிறுவனங்கள் 16 நாட்கள் மூடப்பட்டமை பராக் ஒபமாவின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்தமைக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
நன்றி.

Forbes'
2013 list of powerful people:
நன்றி.
No comments:
Post a Comment
கருத்துக்கள்