Monday, June 25, 2012

கடனட்டை மோசடிகள் எப்படி இடம்பெறுகின்றன?


உங்களது கடனட்டை திருடப்பட்டிருக்காது, ஆனால் உங்கள் கடனட்டையை இன்னொருவர் பயன்படுத்தி பணத்தை செலவுசெய்த அபாயத்தை நீங்கள் எதிர் கொண்டிருக்கலாம். இது எப்படி சாத்தியமாகும்?.

Card Cloning

கடனட்டை ஒன்று நகலெடுக்கப்பட்டு (Cloning) மோசடி செய்யப்படுவதனை இது குறிக்கின்றது. அநேகமாக, இதற்கு ஒரு கருவி பயன்படுத்தப்படுகின்றது. இந்த தொழில்நுட்பம் Skimming என அழைக்கப்படுகின்றது. இம்முறையின் மூலம் திருடர்கள் கடனட்டையின் மின்னியல் தரவுகளை நகலெடுப்பது சாத்தியமாகின்றது. இத்தொழில்நுட்பத்தின் மூலம் திருடர்கள் உங்கள் கடனட்டையை ஒத்த ஒன்னொரு அட்டையை உருவாக்கிக் கொள்கின்றார்கள்.





பொதுவாக இந்த சாதனங்கள் பண இயந்திரங்களுடன் பொருத்தப்படுகின்றன. ஆனாலும் சில வேளைகளில் சில்லறை விற்பனையில் ஈடுபடும் திருடர்களும் மறைத்துப் பயன்படுத்துகின்றனர். பண இயந்திரத்தில் கடனட்டையை செலுத்தும் துளைக்கு மேலாக Skimming என்ற கருவி பொருத்தப்படுகின்றது. நீங்கள் அட்டையை உட்செலுத்தும்போது மிங்காந்தத் துண்டுகளிலிருந்து தகவல்கள் நகலெடுக்கப்படுகின்றன.

பெரும்பாலும் திருடர்கள் கடனட்டைகளின் ரகசியக் குறியீட்டை (PIN) பெறுவதற்கு முயற்சிக்கின்றனர். சில வேளைகளில் ஒரு சிறிய கெமராவினையும் பயன்படுத்த முனைகின்றனர். ATM களில் இந்த கெமரா பொருத்தப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாக நீங்கள் கவனமாக இருக்கவேண்டும். ATM இனை பயன்படுத்த முன்னர், முற்றுமுழுதாக அதனை சோதனை செய்யுங்கள். அத்துடன் உங்களை யாராவது வேவு பார்க்கின்றார்களா? என்பதனையும் கவனித்துக்கொள்ளுங்கள்.

இவ்வகையான திருட்டுக்கள் மிகவும் கடினமானவையாகும். ஆகவே கைதேர்ந்த திருடர்களாலேயே இவை மேற்கொள்ளப்படுகின்றன. இவர்கள் வெளிப்படையாக எதனையும் செய்வதில்லை. நன்கு திட்டமிட்டு Skimming என்ற கருவியை ATM இனுள் பொருத்துகின்றனர்.

நீங்கள் இரகசிய இலக்கத்தை அழுத்தும் முன்னர், உங்களுக்குப் பின்னால் யாரும் இருக்கின்றார்களா? என்பதனை உறுதிப்படுத்திக்கொள்வதும் பாதுகாப்பாக இருப்பதற்கு இன்னொரு வழியாகும். அதேவேளை, போலிஸ் அல்லது வங்கி எனக்கூறும் எல்லோருக்கும் எடனே உங்கள் இரகசிய இலக்கத்தை வெளிப்படுத்த வேண்டாம்.

உங்கள் கடனட்டை ATM இனுள் மாட்டிக்கொண்டுவிட்டால் அவ்விடத்தில் நின்றபடியே உடனடியாக வங்கிக்கு அறிவியுங்கள். அத்துடன், அந்த நேரத்தில் உங்களுக்கு உதவ யாரும் முன்வந்தாலும் கூட எச்சரிக்கையாகவே இருங்கள்.       

கண்டிப்பாக, உங்களது கணக்கு அறிக்கைகளை சீறாக பரிசீலித்து வாருங்கள். உங்கள் கணக்கு அல்லது கடனட்டை தொடர்பாக ஏதாவது ஆபத்து இருக்கலாம் என்று எண்ணினால் உடனடியாக உரிய வங்கியை அல்லது வழங்குநரை தொடர்புகொள்ளுங்கள். அவர்கள் உங்கள் கணக்கை சரிபார்ப்பதுடன் புதிய கடனட்டை வேண்டுமென்றால் கூட அனுப்பிவைப்பார்கள். இந்த வகையான மோசடிகளால் பாதிக்கப்பட்ட பல அப்பாவிகள் கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிடுகின்றார்கள். அப்படி இருக்கக் கூடாது.



நன்றி.

No comments:

Post a Comment

கருத்துக்கள்