Tuesday, June 12, 2012

6.5 மில்லியன் LinkedIn கடவுச்சொற்கள் திருடப்பட்டுள்ளன



தொழில்சார் LinkedIn வலைப்பின்னலில் உள்ள 6.5 மில்லியன் வரையான கடவுச்சொற்கள் (passwords) திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பிரச்சினைகளை LinkedIn தளம் தனது முகப்பு பக்கத்திலேயே தெரியப்படுத்திக்கொண்டுள்ளது.



உலகளாவிய ரீதியில் 150 மில்லியனுக்கு மேற்பட்ட பயனர்களை LinkedIn கொண்டுள்ளது. தனிப்பட்டவர்களின் மின்னஞ்சல் முகவரிகளும் திருடப்பட்ட தரவினுள் உள்ளடங்கியிருக்கலாம், எனவே வேறுபட்ட தளங்களில் ஒரே கடவுச்சொல்லை பாவிப்பவர்களுக்கு இது பிரச்சினையாக அமையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திருடப்பட்ட தரவுகள் தொடர்பான அறிக்கையினை தெளிவுபடுத்துவதற்கு தமது குழு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேவேளை Dagens IT என்ற நோர்வேயின் செய்தித்தாளும் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளமை இங்கு குறிபிடத்தக்கது.

பயனர்கள் உடனடியாக தமது கடவுச்சொற்களை மாற்றியமைத்துக்கொள்வது நல்லது எனவும் எவ்வளவு சீக்கிரம் அதனை செய்யமுடியுமோ அவ்வளவிற்கு பயனர்களுக்கு சாதகமானது எனவும் அறிவுறுத்தப்படுகின்றது. அத்துடன் கடவுச்சொற்களை பாதுகாப்பான வகையில் அமைக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.





நன்றி.

No comments:

Post a Comment

கருத்துக்கள்