மனிதனை தனித்துவப்படுத்திக் காட்டும் சிறப்புக் குணங்களில் இச் சிரிப்பும் முக்கியமானது, இருப்பினும் சிரிக்காமலிருக்கும் பலர் ஏதோ தம் stile என்று எண்ணிக்கொள்கிறார்களோ? அல்லது ??????, முக்கியமாக பொதுச்சேவை உத்தியோகத்தர்கள் பலர் பொதுமக்களிடம் எரிந்து விழுகிறார்கள். அரச ஊழியம் கிடைத்துவிடும் தானே என்ற திமிரோ? ஒரு பட்டிமன்றத்தில் சாலமன் பாப்பையா சொல்வார் ''தற்போது கற்பிக்கப்படும் கல்வி பணத்தினை சம்பாதிப்பதற்கு மட்டுமே, பண்பினை எடுத்துரைக்கத் தவறிவிடுகின்றன'' உண்மைதான்.
Sunday, October 30, 2011
07 ஆம் அறிவு திரைப்படம்

வரலாற்றை மறக்கக் கூடாது என்பதையும் தமிழர் பாரம்பரியத்தியும் வீரத்தையும் ஆதாரப்படுத்தும் 07 ஆம் அறிவு திரைப்படம், யாழ் நூலகம் எரிக்கப்பட்டமையும் நினைவுகூறப்படுகிறது. மிக அற்புதமான படைப்பு....
Saturday, October 29, 2011
சின்னத்திரைகளின் title பாடல்கள்
பொதுவாக சின்னத்திரைகளின் title பாடல்கள் நம் மனதில் இலகுவாகப் பதிந்துவிடும், எனக்கு சின்னத்திரைகள் பார்க்கப் பிடிக்காது, ஆனால் அவற்றின் title பாடல்கள் கேற்கப் பிடிக்கும். ‘’Isaitamil.in’’ இத் தளத்தின் home page இல் Serial Songs இனை click செய்யுங்கள். or , You tube இல் video ஆக search செய்தும் பார்க்கலாம்.
''ஆசிரியர் தினம்''
சில ஆசிரியர்களைப் பார்த்தால் இவர்களின் மூளை எமக்கு வந்திருக்கக் கூடாதா! என தோன்றும், சில ஆசிரியர்களைப் பார்த்தால் இவர்கள் எப்படித்தான் ஆசிரியர்களாக வந்தார்களோ? எனத் தோன்றும், முதல்வகை ஆசிரியர்கள் மட்டுமே இருந்தால் போதும். நீங்க என்ன சொல்ரீங்க?
திரைப்படங்களில் சில வரிகள்
திரைப்படங்களில் சில வரிகள் எம் உயிரைத் தொடுவதுண்டு, அதற்கு பின்னணி இசையும் காட்சியும் அழகாக வடிவமைக்கப்படுவது எம் மனதில் பதிய ஏதுவாகின்றது, ''டிஸ்யூம்'' என்ற திரைப்படத்தில் இந்த நண்பர் கூறும் வரிகள். ''கடவுள் கூட தவறு செய்பவன் தானே! இல்லையென்றால் என்னை இப்படிப் படைத்திருப்பானா?''
"விசேட தேவையுடையோர்"
இவர் போன்ற நண்பர்களை ஊணமுற்றோர் என்று அழைப்பதனை விட "விசேட தேவையுடையோர்" என்று அழைப்பது அழகல்லவா?.... சில ஊடகங்கள் அழகாக இருந்தாலும் சில ஊடகங்கள் அதனை மாற்றாமல் இருப்பது கவலைக்குரியதே, "விசேட தேவையுடையோர்" என்று அழைக்கும் ஊடகங்களுக்கும் ஏனையோர்க்கும் எனது வாழ்த்துக்கள்.
Wednesday, October 5, 2011
Subscribe to:
Posts (Atom)