Saturday, November 3, 2012

கர்ப்ப காலத்தில் chips வேண்டாம்

கர்ப்ப காலத்தில் Acrylamide அதிகம் அடங்கிய உணவுகளை உற்கொள்வதனால் குறைந்த எடையுடைய குழந்தைகள் பிறக்கும் என்பது ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.





கர்ப்ப காலத்தில் chips மற்றும் crisps போன்ற உணவு வகைகளை உற்கொள்வதானது, குறைந்த எடையுடைய குழந்தைகள் பிறக்கும் ஆபத்தை அதிகரிப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

பார்சிலோனியாவில் உள்ள Centre for Research in Environmental Epidemiology (CREAL) அமைப்பினால் இந்த சர்வதேச ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கர்ப்ப காலத்தில்  Acrylamide இணை அதிகமாக உட்கொண்ட பெண்களுக்கு குறைந்த எடையுடையதும் சிறிய தலைச் சுற்றளவை கொண்டதுமான குழந்தைகள் பிறந்தமை கண்டறியப்பட்டது.






பொறித்தல் மற்றும் வறுத்தல் போன்ற முறைகளில் அதிக வெப்பநிலையில் தயாரிக்கப்படும் உணவு வகைகளில் (crisps, chips or crackers) அதிக காபோவைதரேட் உருவாக்கப்படுவதனால் Acrylamide என்ற ஒரு இரசாயனம் காணப்படுகின்றது. இது கர்ப்பத்திலுள்ள குழந்தைகளின் சுகாதார ஆற்றலை பாதிக்கும் என விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

2006 தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் டென்மார்க், இங்கிலாந்து, கிரீஸ், நோர்வே மற்றும் ஸ்பெய்ன் போன்ற நாடுகளில் உள்ள 1100 கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிறந்த குழந்தைகளின் உணவுப் பழக்கவழக்கங்களை CREAL ஆராய்ச்சியாளர்கள் அவதானித்தனர்.

பெண்களிடம் உணவு மற்றும் புகைத்தல் உள்ளிட்ட ஏனைய பழக்கவழக்கங்களை பற்றியும் ஆராய்ந்தனர்.

கர்ப்பத்தின் இறுதி மாதங்களில் Acrylamide அளவு வெளிப்பாடுகளை ஆராய்ச்சியாளர்கள் வழங்கினர்.

அதில், Acrylamide மட்டத்தினை பொறுத்து விளைவின் தாக்கமும் வேறுபட்டிருந்தது. குழந்தையின் ஆகக் குறைந்த எடையாக 132 கிராம்களாகவும் தலையின் சுற்றளவு 0.33 cm களாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

உயர்ந்த மட்ட Acrylamide, இங்கிலாந்தில் பிறந்த குழந்தைகளிலும் குறைந்த மட்ட Acrylamide, டென்மார்க்கில் பிறந்த குழந்தைகளிலும் காணப்பட்டது.

Acrylamide இன் பாதிப்பானது புகைத்தலினால் ஏற்படுகின்ற பாதிப்பை ஒத்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






மேலும், குழந்தைகளின் எடை குறைவதானது இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுடன் தொடர்புபடுவதாகவும் குழந்தைகளின் தலை சுற்றளவு குறைவாக இருப்பது நரம்பு வளர்ச்சியை பாதிக்கும் எனவும் ஆய்வின் சார்பில் கூறப்பட்டுள்ளது.



நன்றி.

1 comment:

  1. நல்லதொரு பயனுள்ள பகிர்வு...

    எப்போதுமே இதை நாங்கள் சாப்பிடுவதில்லை...

    நன்றி...

    ReplyDelete

கருத்துக்கள்